41 குமார சம்பவம்
பல்லவி
மதன பானம் தாக்கிட
மகாதேவன் தவம் கலைந்திட
கதன குதூகலத்துடன்
கந்தனவன் ஜனித்தனனே
மதன பானம்
அனுபல்லவி
வதன சுந்தரி ரதி துயர்
போக்கிடக் கனிந்துருகி
சதா கருணாவதி உமாக்
காமனைக் காண்பித்தளே
மதன பானம்
சரணம்
கார்மேகம் தவழ்ந்திடும்
பனிமலை சிகரந்தனில்
பார்வதியின் சௌந்தர்யம்
கண்டுக் கண் திறந்தான்
ஆர்துயரை அமிழ்த்திடும்
ஆதிதேவன் அன்பினால்
சீர்பொங்கும் சிவகாமி
நந்தனன் கந்தன் வந்தனனே
மதன
பானம்
0 Comments:
Post a Comment
<< Home