Sunday, July 26, 2020

42 நடராஜ் 24-8-2015


                                  பல்லவி

பித்தம் தெளிய வழியுண்டுப் பித்தனைப் பிறை சூடியனை 
நித்தம் வணங்கிட்டால் பிறவித் துயர் சடுதியில் விலகும்
                                                                          பித்தம்
                              அனுபல்லவி

சித்தம் தெளிந்து சிந்தனை உயர்ந்திட சிவனை ஈசனை
பக்தியுடன் பரவசமாய்ப் பணிந்திட்டால் பயனுண்டு    
                                                                         பித்தம்

                                     சரணம்

அருமருந்தாகி அருளும் ஆண்டவனே அனைத்துயிர்க்கும்
கருவாகி மறுபடி வாராதிருக்கக் கனிவுடன் அருள்வான்
திருச்சிற்றம்பலத்தில் நின்றாடும் நீலகண்டன் நிச்சயம்
பெரும்பிணியைத் தீர்த்திடும் மகாமருத்துவனாவான் மனமே
                                                                            பித்தம் 

0 Comments:

Post a Comment

<< Home