46 விக்னேஸ்வரன் (கணேஷ் சதுர்த்தி அன்று எழுதியது) 17-09-15
பல்லவி
கவலைகள் தீர்க்கும் கணபதியே கலா நாயகா
கவிகட்கெல்லாம் கவியேக் கலியுகக் கடவுளே
கவலைகள்
அனுபல்லவி
சிவசக்திப் புத்திரனே சிதானந்தமருள் சித்தனே
பவரோகமழிந்திட மருந்தளித்திடும் பவித்ரனே
கவலைகள்
சரணம்
நாகாபரணந்தனைப் பூணூலாய்க் கொண்டப் புண்யனே
சோகமனைத்தையும் ஒழித்திடும் சோமாபரணனே
ஆகம சாத்திரங்கலனைத்துங் கரைகண்ட கணபதே
வேகமாய் வந்தெமைக் கைத்தூக்கிக் காத்திடுவையே
கவலைகள்
0 Comments:
Post a Comment
<< Home