45 உபநிஷத் சாராம்சம் 12-09-2015
பல்லவி
மனவியாகூலம் தீர்ந்திட வேண்டுமானால் மனிதா
தினமும் தியானம் செய்திடுவாய் தீர யோசிப்பாய்
மனவியாகூலம்
அனுபல்லவி
இனம் தெரியாத இன்னல் வரும் போது இதயத்தை சோதிப்பாய்
கனவில் இந்திரியங்கள் இல்லாதிருக்க உணர்ந்திடு உண்மையை
மனவியாகூலம்
சரணம்
ஆழ உறங்கிடும் போதே ஆத்மா விழித்திருக்கிறதே
வேழம் தன் தாபம் தணிய குளிர்ந்த மடுவினை நாடி
ஆழ்ந்து அமிழ்ந்து அமைதிக் கண்டிடுவது போலே
சூழும் சுடுவினைகள் போகத் தன்னையேத் தேடிடுவாய்
மனவியாகூலம்
0 Comments:
Post a Comment
<< Home