48 நடராஜர் குடும்பம் 21-09-2015 morning
பல்லவி
நடமாடும் தெய்வமே நமனை உதைத்தவனே
நடனமாடிக் கழித்துக் காக்கும் கலியுக தேவனே
நடமாடும்
அனுபல்லவி
இடதுப் பதம் தூக்கி ஆடிக் களைத்துப் பின்னரே
இடம் மாறி
மதுரையில் பதம் மாற்றினையே பசுபதே
நடமாடும்
சரணம்
சிங்காரி சிவகாமசுந்தரி மணாளனே சிவனே
தங்கக் கூரையின் கீழ் தாண்டவம் ஆடினையே
மங்களம் பொங்கும் முக்குருணி விநாயகன் ஒருபுறம்
சிங்கம் போன்ற சேவற்கொடியோன் மறுபுறமிருக்க
நடமாடும்
0 Comments:
Post a Comment
<< Home