47 தர்மதேவதை (கதோபநிஷத்) 20-09-2015
பல்லவி
நசிகேதனக்கு நல்வரம்
நல்கிய அறக்கடவுள் யமன்
விசித்திர வித்யையை
அளித்தக் கதையாம் உபநிஷத்
நசிகேதனக்கு
அனுபல்லவி
சச்சிதானந்த ஸ்வரூபமாம்
பிரம்மனை அடைந்திடவே
கச்சிதமாய் யாகமுறை தந்ததொறு
சிறு வழியாம்
நசிகேதனக்கு
சரணம்
நேர்வழி புகட்டிட வேறொன்று
கதி யுண்டென
தேர் உருவகத்தால் உண்மை உணர்த்தினார்
கார் போன்ற கரியவனாம் கால
தேவதைக் கனிந்து
சீர்முகு உபதேசம்
சிறுவனுக்கு விரித்துக் காட்டினார்
நசிகேதனக்கு
0 Comments:
Post a Comment
<< Home