53 வேத மகாவாக்கியங்கள் 21-10-2015 11am vijayadasami
பல்லவி
தத்துவ ஞானம் பேசத் தகுதியுண்டோப் பேதை எந்தனுக்கு
சத்தியமெது நித்தியமெது என்றறியாதுக் கலங்குமெனக்கு
தத்துவ
அனுபல்லவி
“தத்வமஸி” என்று தனயனக்கு
உபதேசித்தத் தபஸ்வி
சுத்தமாய் நீயே அது என்று எடுத்துரைத்தார் ஏத்துவையே
தத்துவ
சரணம்
நானே பரப்ரஹ்மம் என்ற நல்வாக்கியம் “ அஹம் பிரம்மாஸ்மி”
ஞானமே ப்ரஹ்மம்
என்றால் “ப்ரஞானம்
பிரஹ்மா” ஆகும்
தீனனே திவ்யாத்மா என்றது “ அயம் ஆத்மா பிரஹ்மா” அல்லவா
கானல் நீரை நாடாது மகாவாக்கியங்களை நாடிடுவாய் நாளும்
தத்துவ
0 Comments:
Post a Comment
<< Home