52 மகாவிஷ்ணு 15-10-2015
பல்லவி
சுந்தர வதனமும் சுருள் முடியும் நிரந்தரம் ஆகுமா
விந்தை மனிதா விதி வீதி முனையில் நிற்கிறதே
சுந்தர
அனுபல்லவி
அந்தரத்தில் அல்லாடும் காற்றாடி போலாகுமே ஜீவிதம்
கந்தம் புனுகு ஜவ்வாதும் எத்தனை மணித்துளி நிற்கும்
சுந்தர
சரணம்
சூழும் பாற்கடலினின்றுத் திருமகள் பின் வந்திட
வேழமொன்றினிற்கென்று விரைந்தோடி வந்த
வாழும் தெய்வம் பரந்தாமன் பதம் பணிவாய்
கீழுலகம் செல்லாதுப் பிறவிப் பிணிப் பறந்தோடுமே
சுந்தர
0 Comments:
Post a Comment
<< Home