51 கிருஷ்ணன் 5 6-10-2015
பல்லவி
வெண்ணைத் திருடி விளையாடி நின்ற விமலனே வீரனே
மண்ணைத் தின்ற வாய் திறந்து மாமண்டலங் காட்டினையே
வெண்ணைத்
அனுபல்லவி
திண்ணமாய் கிரிதனைக் குடையாக்கி யாதவரைக் காத்திட்டாய்
கண்ணனே காளிங்கன் தலைதனை நடனமேடை ஆக்கினையே
வெண்ணைத்
சரணம்
கோபியர் வஸ்த்ராபாஹரணம் செய்து நின்ற வம்பனே
பாபியர்க்கெல்லாம் பரமபதம் அளிக்கும் பரந்தாமனே
தீப்பிழம்புடன் யமகிங்கரர் வந்து அச்சுறுத்தும் போது
நாபிக் கமலன் கொண்ட நாராயணா நாதி நீயன்றோ
வெண்ணைத்
0 Comments:
Post a Comment
<< Home