54 சரஸ்வதி 5-11-2015
பல்லவி
கல்விக்கரசியே கலாநிதியே
கருணாமயி சரஸ்வதி
வல்வினைப் போக்கிட
வளர்மதித் தந்திடும் வாணியே
கல்விக்கரசியே
அனுபல்லவி
சொல்லுக்கதிபதியே சொர்ணக்
கமலத்திருப்பவளே
வல்லமை தந்திடும் மேதா
சக்திதனை அருள்வாய்
கல்விக்கரசியே
சரணம்
வெள்ளைத்தாமரை மீதமர்ந்து
விதியினை வெல்பவளே
தள்ளாத வயதினிலும் தளராத
அறிவளிப்பவளே
வெள்ளப் பெருக்கனைய மதி
பலம் தந்திடுவாய்
கள்ளம் கபடு சூது
இவற்றைக் களைபவளேக் கலைவாணி
கல்விக்கரசியே
0 Comments:
Post a Comment
<< Home