55 சரணாகதித் தத்வம் 2-12-2015
பல்லவி
வியாகுலம் கொண்ட மனது விரக்திக் கொள்ளுதே
வியாதி இன்னதென்று அறியாதுத் தவித்துத் தடுமாறுதே
வியாகுலம்
அனுபல்லவி
கியாதி கீர்த்தி தன தானியம் எதுவும் வேண்டாம்
தியாக புத்திக் கொண்டிடு தீராதத் தீவினைத் தீர்ந்திடுமே
வியாகுலம்
சரணம்
சலனம் கொள்ளாதே சரணாகதி அடைந்திடுவாய்
சலசலக்கும் நீரோடைப் போல நில்லாது ஓடாதே
கலவரம் கொள்ளாது கவனித்து தியானிப்பாய்
பலபலவென்று வெளுத்திடும் இருள் களைந்திடும்
வியாகுலம்
0 Comments:
Post a Comment
<< Home