58 ஆறுமுகன் 18-01-2016
பல்லவி
ஆறுமுகனே ஆண்டவனே ஐயனுக்கும் குருவே
வேறுகதியில்லை வேதனைப் போக்கி உயர்த்திடுவாய்
ஆறுமுகனே
அனுபல்லவி
மாறுதலின்றி ஜனன மரண சுழலில் சிக்கிய பின்
கூற முடியாத் துயரில் ஆழ்ந்த எனைக் காத்திடுவாய்
ஆறுமுகனே
சரணம்
பரம குருவே பரமனுக்கும் குருவே பதம் பணிவேன்
நர ஜென்ம மெடுத்து நாதியின்று அலைந்திடும்
விரக்தியின் எல்லைக்கே அடைந்திட்ட ஏழை எனக்கு
வரமளிப்பாய் திரும்பவும் பிறப்பில்லாது ஆட்கொள்ளும்
ஆறுமுகனே
0 Comments:
Post a Comment
<< Home