57 அருள் நிலைகள் 25-12-2015
பல்லவி
நிஜமா கனவா நீள்துயிலா அதுவுமன்றி வேறொன்றா
கஜகர்ணம் செய்தாலும் அடையலாகா அருள்நிலையா
நிஜமா
அனுபல்லவி
பஜனை பக்தி என்று பகலில் செய்கையில் விஷ்வனே
நிஜமான விழிப்புணர்வாய் ஒளிர்ந்து விளங்குபவன்
நிஜமா
சரணம்
கனவினில் கவனித்திருப்பவன் தைஜச்வியாவான்
மனச்மரனை இல்லத் தூக்கத்தில் பிரக்ஞையே தேவன்
அனைத்தையும் கடந்து அனைத்தையும் கொண்ட துரியா
எனப்படும் நிலையில் பரப்ர்மனே காப்பு பராபரனே
நிஜமா
0 Comments:
Post a Comment
<< Home