61 நடராஜர் 3 18-03-2016
பல்லவி
குன்று போல் வரும்
துயரெல்லாம் குஞ்சித பாதமே
சென்றவிடம் தெரியாது
செய்திடும் பெருந்தகையே
குன்று
போல்
அனுபல்லவி
தொன்று முதற் கடவுளே
தோடுடை செவியானே
அன்று செய்த வினைப்
பயன்களை அறுத்தெரிவாயே
குன்று
போல்
சரணம்
நடமாடும் தெய்வமே நாளும்
நன்மையே செய்வாய்
விடநாகபூஷணனே விரைவில்
விடுவிப்பாய் வினைகளை
தடங்கல்கள் தவத்தின்
போது வந்தால் அவற்றினை அகற்றிடு
மடமைகள் தீர்ந்து
மகாதேவன் பாதங்கள் சேர்ந்திடவே
குன்று
போல்
0 Comments:
Post a Comment
<< Home