59 நடராஜர் 2 15-02-2016 8.30 pm
பல்லவி
கைதூக்கி விடலாகாதா கனகசபாபதே
தைதை என்றாடிக் களைத்திட்டால் என்ன
கைதூக்கி
அனுபல்லவி
வதைத்திடும் ஜனன மரணச் சுழலில் சிக்கி
சிதை நெருப்பில் வெந்திடும் வெம்பாவி என்னை
கைதூக்கி
சரணம்
ஆலகால விடமுண்டு மயக்கம் அடைந்தீரோ
காலனைக் காலால் மிதித்துக் கால்வலி கொண்டீரோ
காளியுடன் நடமாடிய ஆனந்தக் களைப்புமுண்டோ
சூலம் தாங்கி திண்தோள் துவண்டதோ இருப்பினும்
கைதூக்கி
0 Comments:
Post a Comment
<< Home