60 முருகன் 2 17-03-2016
பல்லவி
தூக்கமாம் மாய சக்ரவ்யூகத்தினின்று விடுத்திட
சீக்கிரம் வருவாய் சிங்காரவேலனே சிவசுதனே
தூக்கமாம்
அனுபல்லவி
ஆக்கமும் அறிவும் கூர்வேல் அனைத்த நன்மதியும் தந்திடு
நோக்கம் ஒன்றே கொண்டு நல்வினை நான் புரிந்திடவே
தூக்கமாம்
சரணம்
அசுரர்களை அழித்தது போல் என் அசுர குணங்களைக் களைந்திடு
பசுமரத்தனிப் போலப் பக்குவந்தனைப் பாவிக்குள் அறைந்திடுவாயே
பசுபதி தன் பாலனே பாகேஸ்வரி மைந்தனேப் பாலித்திடுவாயே
கசடுக் கபடுக் கள்ளத்தனங்களைக் கடிதினில் கட்டொழிப்பாய்
தூக்கமாம்
0 Comments:
Post a Comment
<< Home