68 மனித நலம் 6-12-2016
பல்லவி
காமந்தகாரனாய்க் கானல்
நீரைத் தேடி அலைந்து
ஏமாற்றமடைந்து ஏக்கமடைதல்
நலமோ மனிதா
காமந்தகாரனாய்
அனுபல்லவி
சமானமெனக்கில்லை என்று
செருக்கடையாதே
குமரனும் குடுகுடு
கிழவனாகிடுவான் சடுதியில்
காமந்தகாரனாய்
சரணம்
தினமும் திவ்ய நாமங்களை
ஜபித்திடு ஜடமே
மனந்தனை மனதால் கட்டிடு
மயங்கிடாதே
சினந்தனை ஒழித்திடு சீராக
வாழ்ந்திடுவாயே
கனத்திடும் பிறவி பாரம் ஒழிந்திடுங் கலங்காதே
காமந்தகாரனாய்
0 Comments:
Post a Comment
<< Home