67 கணபதி 4 30-09-2016
பல்லவி
ஐங்கரனை ஐயன் மகனை
ஜபித்திடு என்றும் நற்
கைங்கர்யங்கள் செய்திடு
மகாகவியைத் துதித்திடு
ஐங்கரனை
அனுபல்லவி
சங்கரன் மைந்தனைத்
தொழுதிட்டால் துகள்மதியே யம
கிங்கரர்கள் சிரம்
தாழ்த்தி சாமரம் வீசி வணங்கிடுவர்
ஐங்கரனை
சரணம்
சஞ்சலங்கள் யாவும்
சடுதியில் மறைந்திடும் அவனருளால்
சஞ்சித பாவங்களும் நீங்கிடும்
சரணம் அடைவாய் அவனை
குஞ்சித பாதனும்
உமையாளும் உனக்கருள்வாரென்றே
நெஞ்சார நினைத்து வாயாரப்
பாடி வாழ்த்தி வணங்கிடு
ஐங்கரனை
0 Comments:
Post a Comment
<< Home