70 சூரியன் 9-12-2016
பல்லவி
தினம் தினம் தீயிருளைத்
தகர்த்திடு தயாளனே
தினகரனே திவ்யஸ்வரூபனே ஆற்றல்
அளிப்பாய்
தினம் தினம்
அனுபல்லவி
வனந்தனில் விருக்ஷங்கள்
ஓங்கிட மழை தருவாய்
மனந்தனில்
மாசுபடியாதிருக்க திடம் தருவாய்
தினம் தினம்
சரணம்
ஆதவனே அருள் பாலிப்பாய்
திடமுடன் பலம் தருவாய்
ஆதி முதற் கடவுளே
ஆணவந்தனை அழித்திடுவாய்
சோதனைகள் சோகங்கள்
மனக்கவலைகள் களைந்திடுவாய்
ஜோதிரூபனே சூரியனே சூரனே
அருள் தருவாய்
தினம் தினம்
0 Comments:
Post a Comment
<< Home