77. மாதவன் (கிருஷ்ணன் ) 23/07/2017)
பல்லவி
மாசில்லா மாதவனை மனதினால் நினைத்திட்டால்
தூசு போல் பறந்திடுமே துன்பம் துயரெல்லாம்
மாசில்லா
அனுபல்லவி
காசு பணமென்னும் கானல் நீரைத் தேடித் திரியாதே
ஈசல் போல் பிறவிச் சுடரில் சிக்கி எரிந்திடாதே
மாசில்லா
சரணம்
தாமரைக் குளத்து முதலை வாய் சிக்கிய யானைக்கும்
தாமரைக் கண்ணாள் ஐவர் மனைவி பாஞ்சாலிக்கும்
நாமார்ச்சனை ஒன்றினாலே ஓடி வந்து உதவிடும்
கோமானை கோவிந்தனை சேவித்திடு பாலிப்பான்
மாசில்லா
0 Comments:
Post a Comment
<< Home