76. துவாரகாநாத் 06/05/2017
பல்லவி
விளையாட்டுப் பிள்ளையாய் வீணில் காலம் கழித்தேனே
களை நீக்கிட வந்திட்டுக் கற்றாழை நாட்டிட்டு களித்திருந்தேனே
விளையாட்டு
அனுபல்லவி
விளையும் பயிரை வளர்த்திடாமல் வீணாய் சிற்றின்பத்தில்
திளைத்திருந்து தீவிரமாய் பாவந்தனை அறுத்திட்டேனே
விளையாட்டு
சரணம்
இகம் பரம் சுகம் துக்கமென்னும் இரு கரை நடுவில்
அகன்று சுழித்து ஓடிடும் காட்டாற்றில் சிக்கித் தவித்து
மகன் மகள் மனைவி தாய் தந்தை உறவு சுற்றமென்று
தகித்திடும் தாபத்தினின்று தூக்கிடுவாய் துவாரகநாதனே
விளையாட்டு
0 Comments:
Post a Comment
<< Home