75 கற்பகாம்பிகை 5-5-2017
பல்லவி
கருணாமயி கற்பகவல்லி கல்ப
தருவே காமாக்ஷி
சரணாகதி அடைந்தேன்
சடுதியில் வரமளிப்பாய்
கருணாமயி
அனுபல்லவி
தருணமிதே தயை புரிவாய்
தயாபரி தாயே
மரணம் மறுபிறவி இலாது தயை செய்திடுவாய்
கருணாமயி
சரணம்
தினந்தினம் தீனன் நான்
தாபத்ரயத்தில் தவித்திட
வனத்தீயில் சிக்கி
மருவிடும் மான்போல் மயங்கிட
இனமறியா இம்மை மறுமை
சூழலில் சிக்கி அழுதிட
க்ஷணத்தில்
மோக்ஷமளித்திடுவாய் மோகனாம்பாளே
0 Comments:
Post a Comment
<< Home