73 கஜேந்திர மோக்ஷம் 15-2-2017
பல்லவி
தாகம் தணிந்திடத் தாமரைக்
குளம் புகுந்த கரிநாதன்
வேகமாய் வந்த முதலை
வாயில் சிக்கித் தவித்திட
தாகம்
அனுபல்லவி
சோகமுடன் நின் நாமந்தனை
நினைந்தேத்திட
மோகவலை தகர்த்திடும்
மோகனனே காத்திட்டாய்
தாகம்
சரணம்
பாண்டிய ராஜன் முனி
சாபத்தால் கரியாகித் தவிக்கையில்
வேண்டிய வரம் தந்திட
வேகமுடன் வந்திட்டாய்
தீண்டிய சாபம் நீங்கிட
முதலைக்கும் மோக்ஷம் அளித்தாய்
தாண்டிடப் பிறவிக் கடலினை
ஆண்டவனே அருள்வாய்
0 Comments:
Post a Comment
<< Home