72 சூரியன் 2 27-01-2017
பல்லவி
சூரியனே சூராதி சூரனே
ஜோதி ஸ்வரூபனே
வீர்யமுடையோய் வீராதி
வீரனே வினை தீர்
சூரியனே
அனுபல்லவி
காரியம் நிறைவேறிடக்
காத்தருள் தந்திடு கடவுளே
மாரி மாதம் மும்முறைப்
பொழிந்திடச் செய்வாய்
சூரியனே
சரணம்
யுத்த மத்தியில் மனம் தளர்ந்த மைதிலி மணாளன்
சத்திய சந்தன் ஸ்ரீராமன் கவலை
தனைப் போக்கிட
சித்தமுடன் குறுமுனி
ஓதிட்ட ஆதித்ய ஹ்ருதயம் தனை
நித்தமும் ஒதிட்டால்
தடைகள் நீக்கிடுவாய் தயாபரனே
சூரியனே
0 Comments:
Post a Comment
<< Home