78 Parashakti 23/07/2017
பல்லவி
அம்பா நவமணிமாலைதனை கவி காளிதாசன்
தீம்பா மாலையாய் அர்ப்பித்தான் உந்தனுக்கு
அம்பா
அனுபல்லவி
வெம்பாவி நானுனக்கு சிறுமலர் தந்திடலாகுமோ
தம்பியொடு வேழமுகத்தானுக்குத் தாயே தயாபரியே
அம்பா
சரணம்
ஆதிசங்கரர் அருளிச் சென்றதுவோ சௌந்தர்யலஹரி
பீதி யடைந்து மருண்டு நிற்கும் எந்தனக்கு அருளளிப்பாய்
பாதியாய் பகவான் உடல் கொண்ட பராசக்தி அம்மையே
நீதியா இது? நீசனெனக்கு பாராமுகமேனோ பகவதி தாயே
அம்பா
0 Comments:
Post a Comment
<< Home