81 முருகன் 01/08/2017
பல்லவி
மருள் கொண்டு மிரண்டு நிற்கும் மரண காலத்தில்
அருள் தந்து ஆட்கொள்ளும் ஆண்டவனே பழனி வாழ் மருள்
அனுபல்லவி
முருகா முதல்வா நின்கருணையன்றி வேறேது வேண்டும்
பெருமாள் மருகனே திருமகளும் நின் தயவால் என்னகத்தே
மருள்
சரணம்
இந்திரன் மகளுடன் ஏழை வேடுவப் பெண்ணையும் கொண்டோனே
தந்திரம் மாயம் பேய் பூதம் அனைத்தையும் தொலைத்திடுவோனே
சுந்தர வதனமுடை சுப்ரமணியனே சூலை நோயகற்றிடுவாய் சூரனே
மந்திரம் வேறெதற்கு சரவணபவ எனும் ஆறெழுத்தே போதுமே
மருள்
0 Comments:
Post a Comment
<< Home