83 கபாலீஸ்வரர் 1-08-2017
பல்லவி
சிவாய நமவென்று சிரத்தையுடன் ஜபித்தால்
விவேகம் கூடும் விசாரம் விலகும் வினைகள் தீரும்
சிவாய
அனுபல்லவி
திவாகரனும் எண்கோளுமென் செய்யும் சிவனடிமைக்கே
பவசாகரமும் கடந்திடலாம் பவானி மணாளனருளால்
சிவாய
சரணம்
தருமமிகு மயிலையின் கபாலியினை தினமும் துதித்திடு
கரும வினைகள் காற்றாய் பறந்திடும் கலங்காதே
இரு பிறவிகளும் இருக்கா இன்பலோகம் கிட்டிடும்
திருவிளையாடல் செய்த சிவன் சித்தம் திருத்திடுவான்
சிவாய
0 Comments:
Post a Comment
<< Home