82 சுந்தரேஸ்வரர் (மதுரை) 31/07/2017
பல்லவி
ஆலகால விஷமருந்தி அமரர்க்கு அபயமளித்து
நீலகண்டனாய் நித்தமும் நீள்விசும்பைக் காத்தாய்
ஆலகால
அனுபல்லவி
ஆலால சுந்தரனாய் அங்கயற்கன்னி கரம் பிடித்து
ஆலவாய் நகரில் அரசாட்சி செலுத்தும் ஆண்டவனே
ஆலகால
சரணம்
அறுபத்துநான்கு ஆடல் புரிந்து அனைவரையும் ஆட்டுவித்தாய்
அறுபத்து மூவர் அன்பருக்கும் பேரருள் அளித்திட்டாய்
சிறுபுத்தி கொண்ட சிந்தை நோயாளி எந்தனுக்கும்
மறுமை நோய் வாராதிருக்க மன்னவனே மனங்கொள்வாய்
ஆலகால
0 Comments:
Post a Comment
<< Home