94 எல்லைக் காளி 5-2-2021 12.47 pm
பல்லவி
எல்லைக் காளி அம்மனே ஏழைதனைக் காத்திடுவாய்
தில்லை மாநகர் தாண்டிக் கோயில் கொண்ட திருவாட்டியே எல்லைக்
அனுபல்லவி
அல்லாடி அலைந்து க் களைத்திட்ட அடியேன் எந்தனை
சொல்லவொண்ணாத் துயரினின்று விடுவித்திடுவாய் எல்லைக்
சரணம்
அம்பலத்து நின்றாடிய ஐயன் ஆண்டை நடராஜன்
எம்பெருமானுடன் போட்டியாய் நடனமாடினையே
இம்மை மறுமை இரண்டினின்றும் தடுத்தாட்கொள்வாய்
செம்மையாய் கதி மோக்ஷம் அளிப்பாய் காளியே
எல்லைக்
0 Comments:
Post a Comment
<< Home