87 காயத்ரி தேவி 8-8-2017 , 1008 காயத்ரி ஜபம் செய்த உடனே எழுதியது
பல்லவி
காயத்ரி மந்திரத்தை ஜபித்தால் ஞானம் கைகூடும்
தீய வினைகள் தீர்ந்து போகும் தீராத நோய் தீர்ந்திடும்
காயத்ரி
அனுபல்லவி
மாயையென்னும் மனத்திரை விலகும் நற்சிந்தனை நல்கும்
காயமிது பொய் என்றறிந்து மெய் ஞானம் பெற்றிடுவாய்
காயத்ரி
சரணம்
முப்பெரும் தேவியர் காயத்ரி, சாவித்ரி, ஸரஸ்வதியாவர்
தப்பேதுமில்லா தவப்பயனை தாராளமாய் தந்திடுவர்
இப்பிறவியில் இழைத்திட்ட பாவங்கள் தொலைந்திடும் மற்றும்
முப்பிறவியில் சேர்ந்திட்ட சஞ்சித பாவங்களும் சடுதியில் நீங்கும்
காயத்ரி
0 Comments:
Post a Comment
<< Home