85 கிருஷ்ணன் 07/08/2017 6.20 am
பல்லவி
மோகன கிருஷ்ணா மனமோகன கிருஷ்ணா முரளீதரா
வேகமாய் வந்து வேய்ங்குழல் ஓதி வேதனை தீர்த்திடு
மோகன
அனுபல்லவி
தாகத்தால் தவிப்பவனுக்குத் தண்ணீர் தந்திடல் போல
மோகத்தில் வெந்திடும் எந்தனுக்கு விவேகமளித்திடுவாய்
மோகன
சரணம்
அருணோதயத்தில் அழகு மலர் மணம் வீசுதல் போல்
தரணிதனில் தரும சிந்தனை மலரட்டும் பரவிடட்டும்
தருணமிதே தயை புரிவாய் தயாநிதியே தாமதமேன்
கருணா மூர்த்தியே கண்ணனே கலியுகக் கடவுளே
மோகன
0 Comments:
Post a Comment
<< Home