89 ஏழுமலையான் 18-10-2017 7.00 pm (inspired by Nannu palimpa)
பல்லவி
என்னைப் பாலித்திட ஏழுமலையிறங்கி வந்தனையோ
சின்னக் குழந்தை அழுதிட ஓடி வந்த தாயினைப் போல
என்னைப்
அனுபல்லவி
மன்னர்களும் மகராஜர்களும் பல கோடி தந்துப் பரவிட
என்னைப் போன்ற ஏழையர்க்கு அருள் தந்திட ஆண்டவனே
என்னைப்
சரணம்
தருணமிதே தயாபரனே தந்தையே தனயனைக் காத்திடு
கரும்பின் கனிரசமெனக் கருணை புரிய வரமருள்வாயே
துரும்போன்று அலைதனில் தத்தளிப்பது போன்று இம்மைக்
கருமப் புயலில் சிக்கியேக் கதறிடும் கயவனைக் காத்திடுவாய்
என்னைப்
0 Comments:
Post a Comment
<< Home