88 முருகனும் பரிவாரமும் 15-09-2017, 07-10 pm
பல்லவி
அருகினில் எம தூதர் வந்திடும் போது அஞ்சிடாதே
திருமுருகன் சிரித்துக் கொண்டே தேற்றிடுவான்
அருகினில்
அனுபல்லவி
முருகனைத் துதித்திட்டால் மாமனருள்வான் வைகுண்டம்
திருமகளாம் மாமியோ திருமழைப் பொழிந்திடுவாள்
அருகினில்
சரணம்
அம்மை உமாதேவியோ ஆற்றல் அருளளிப்பாள்
செம்பு நிறம் கொண்ட தகப்பன் தயாபரன்
செம்மையாய் சிவலோகப்பிராப்தி தருவான்
இம்மையில் மறுமை தருவான் மூத்தோன் கணபதி
அருகினில்
0 Comments:
Post a Comment
<< Home