90 முருகன் 10-05-2018
பல்லவி
பள்ளத்தைத் தேடிச் சென்றிடும் வெள்ளத்தைப் போல என்
உள்ளமும் உனையே நாடி உருகுதே உமையவள் பாலா
பள்ளத்தைத்
அனுபல்லவி
கள்ளங் கபடு சூது வாது ஒழிந்திடல் வேண்டும்
வள்ளி மணாளனே வரமருள்வாய் முருகா முதல்வா
பள்ளத்தைத்
சரணம்
இருவினைப் பயன்களும் என்னை வாட்டி வதைத்திடாமல்
கருவறுத்திடு கருணாகரன் கந்தனே காத்து நிற்பாய்
தருணமிதே தயை புரிவாய் தயாபரனே தவமணியே
திருமகள் மருகா தினம் தொழுதேத்தி நின்றிடுவேன்
பள்ளத்தைத்
0 Comments:
Post a Comment
<< Home