91 கரோனா வியாதி 30-03-2020
பல்லவி
கருணாமயிக் கற்பகவல்லியைத் தொழுதிட்டால்
கரோனா வியாதி காத தூரம் பறந்தோடிடுமே
கருணாமயிக்
அனுபல்லவி
பரமசிவன் தாள் பணிந்தால் பார்வதியைத் தொழுதால்
வைரஸ் பறந்தோடிடும் எதிர்ப்பு சக்தியும் கைக்கூடும்
கருணாமயிக்
சரணம்
மஹாவிஷ்ணுவை ஆராதித்திடு மாதவனைப் பணிந்திடு
மஹாமாரி, சூலி, வைசூரி அனைத்தும் அகன்றிடுமே
தேகாரோக்கியம் திடமாகும் தீவினைகள் அகன்றிடுமே
சகாயமளித்திடுவர் சர்வதேவ ரிஷி, முனி கணங்களும்
கருணாமயிக்
0 Comments:
Post a Comment
<< Home