100 அழிவில்லாதது 16-03-2021
பல்லவி
ஆயுதங்கள் அழிக்கா நெருப்பும் எரிக்காததனை
வாயு உலர்த்தாது நீரும் நனைக்காது ஆத்மாவினை ஆயுதங்கள்
அனுபல்லவி
சேயாகி இளைஞானாய் முதுமை அடைவது போல்
ஆயுள் முடிந்து மரிப்பதுவும் ஒரு பருவமே கலங்காதே ஆயுதங்கள்
சரணம்
மாயையால் நிறைந்த மேதினியில் நிலையேதுமில்லை
காயமொழிந்த பின்னும் அழியாதிருப்பது ஆத்மாவே
தீயவை நல்லவை சுகம் துக்கம் வெற்றி தோல்வி இவையால்
ஆய பயன் ஏதுமில்லை நின் கடன் செய்து நிற்பாய் ஆயுதங்கள்
0 Comments:
Post a Comment
<< Home