99 சிவராத்திரி mar 11.2021
பல்லவி
சிவசிவ ஹரஹர உமாபதே உய்விப்பாய்
பவ பயம் பறந்தோடச் செய்வாய் பரமனே
சிவசிவ
அனுபல்லவி
அவனியில் அல்லல்படும் அடிமையெனக்கு
தவப்பயனால் தாபத்ரயம் அகலவேண்டும்
சிவசிவ
சரணம்
மாசிமாதம் சதுர்தசியன்று மாலை மஹாபூஜை செய்து
மாசிலாமணியே மஹாதேவா நினை வந்தித்தேனே
காசுபணம் வேண்டாம் மாடுமனையும் தேவையில்லை
ஆசுதோஷனே அருளளிப்பாய் அருணாச்சல தேவனே
சிவசிவ
0 Comments:
Post a Comment
<< Home