96 கணபதி 7-2-2021 6.30 pm
பல்லவி
கரிவதனா கலியுகக் கடவுளே கருணாமூர்த்தி கஜானனா
விரிபாலையில் திரிந்திடுமெனக்கு திக்கு நீயேயன்றோ
கரிவதனா
அனுபல்லவி
வரகணபதே வரமளிப்பாய் வாழ்வளிப்பாய் வாரணமுகா
சுரர்களுக்குள் அக்ரபூஜைக்கு அதிபதியானாய் ஆனைமுகா
கரிவதனா
சரணம்
புத்தி ப்ரதாயகா ப்ரதமேஷா பார்வதி சுதனே பதீதபாவனா
சித்தி முக்தி அளித்திடும் சிவபாலனே சீராளா சித்திவிநாயகா
நித்தமும் நினையே நினைந்துருகி நின்றேனே நீயே கதி
சத்தியமாய் ஸர்வபாபநிவர்த்தி தந்திடுவாய் சர்வேஸ்வரா
கரிவதனா
0 Comments:
Post a Comment
<< Home