98 கிருஷ்ணன் 20-02- 2021
பல்லவி
மதுர மதுர கீதமிசைக்கும் மனமோகன கிருஷ்ணா மாதவா
மதுசூதனா மாயவா முரளி மனோகரா முராரே முதல்வா
மதுர மதுர
அனுபல்லவி
இதமுடன் இன்னல் தீர்ப்பாய் இம்மை மறுமை அகலவே
பத மலர் பணிந்தேன் பார்த்தசாரதி பதீத பாவனனே
மதுர மதுர\
சரணம்
நந்தகோபன் மகனே யசோதை மனமகிழும் மைந்தனே
சிந்தாகுலம் தீர்த்திடுவாய் சிசுபாலனை வதைத்தவனே
சந்ததம் சஞ்சித பாவந்தனை சடுதியில் அகற்றிடுவாய்
எந்தன் கலித் தீர்த்திடுவையே ஏந்தலே இதய தெய்வமே
மதுர மதுர