101 கர்ம யோகம் 5-3-2021
பல்லவி
கருமமே உனது அதிகாரமாகும் அற்ப மனிதப் பதரே
தருமமாகாது அதன் பலனை எதிர்பார்த்தல் எனவே
கருமமே
அனுபல்லவி
கருவியாகாதே காரியத்தின் பலன் வருவதற்கே
விரும்பி ஆதாயத்தை எத்தொழிலும் செய்யாதே
கருமமே
சரணம்
சோம்பித் திரிதலும் சரியாகாதே மானுட உலகிற்க்கு
தாமரை இலை த் தண்ணீர் போலே தனித்திருந்திடு
சாம்பலும் எலும்புமே எஞ்சி நிற்கும் சாவிற்குப் பின்
தேம்பி அழுது என் பயன் நின் கடனே செய்து நின்றிடு
கருமமே
0 Comments:
Post a Comment
<< Home