92 பரமேஸ்வரி 31-1-2021
பல்லவி
நிதம் நிதம் தொழுதிடுவேனே நித்ய கல்யாணி
பத மலர் பணிந்திடுவேனே பரமேஸ்வரி பார்வதி
நிதம் நிதம்
அனுபல்லவி
விதம் விதமான வேதனைப் பட்டு வாடுமெனக்கு
இதமாய் இன்னருள் புரிவையே இமவான் புத்ரி
நிதம் நிதம்
சரணம்
சகல பாவங்கள் செய்திட்ட பாவி எந்தனுக்கு
இக பர சுகங்கள் அளித்திடுவாய் இறைவியே
மகவிற்குப் பால் தந்திடும் மாதாவைப் போன்று
தகப்பன் தனயனை காத்திடல் போல் பாலிப்பாய்
நிதம் நிதம்