80 சபாபதி (Nataraja, Shiva) 29/07/2017
பல்லவி
கனகசபாபதியே கதிமோக்ஷம் தந்திடுவீர்
கனகதுர்காபதியே கருணாமூர்த்தியே கடவுளே
கனகசபா
அனுபல்லவி
இனம் தெரியா மனத்துயர் கொண்டு வாடுமெனக்கு
நினையல்லால் வேறு கதியேது நீலகண்டனே சிவனே
கனகசபா
சரணம்
வந்தியின் துயர் தீர்க்க பிட்டுக்கு மண் சுமந்தனையே
நந்தியினை சுறாவாக்கி அன்னைக்கும் அருளினாயே
சிந்தனை விசாரம் கொண்டு சிந்தை தடுமாறி நிற்கும்
எந்தனுக்கு எந்தையே ஏற்றம் அளித்திடுவாய் எந்நாளும்
கனகசபா
0 Comments:
Post a Comment
<< Home